தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் – குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

இந்தியாவில் ஓசோன் காற்று அதிகம் வீசும் கடற்கரை நகரமாகவும், புகழ்பெற்ற சுற்றுலா தலமான மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை விளங்குகிறது மேலும் கடற்கரையில் 1620 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பமிக்க டேனிஷ் கோட்டை உள்ளது. தொல்லியல் துறையின் பழங்கால பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகமாக உள்ளது. வரலாற்ற சிறப்பு மிக்க தரங்கம்பாடி கடற்கரை நகரத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.  இந்நிலையில்  ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு   இன்று மாலை  தரங்கம்பாடி கடற்கரையில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். டேனிஷ் கோட்டை, அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை குடும்பதினருடன்  சுற்றி பார்த்தும், கடற்கரை மணலில் குடும்பம் குடும்பமாக அமர்ந்தும், சிறுவர்கள் குதிரை சவாரிச் செய்தும் உற்சாகமாக விளையாட்டி மகிழ்ந்தனர். குடும்பத்தினர்கள் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருகையால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version