விழுப்புரத்திலுள்ள தனியார் விடுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது தேர்தலில் பங்கேற்பது குறித்து ஆலோசனை அக்கட்சியின் தலைவர் செ.கு தமிழரசு தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செ.கு தமிழரசு கடந்த நான்கரை ஆண்டுகால திமுக திராவிட மாடல் ஆட்சியில் தலித் மக்களுக்கு எந்த வித வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தவில்லை அந்த சமூகத்தை உதாசீன படுத்தும் வகையில் திமுக ஆட்சி செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், எல்லா மாநிலங்களிலும் உள்ளாட்சி தேர்தலில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு துனை தலைவர் பதவி வழங்கபடுகிறது ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் வழங்கவில்லை, பட்டியலின சமூகத்தினருக்கு எவ்வளவு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் இல்லை என குற்றஞ்சாட்டினர்.ஆணவ படுகொலைக்கு உரிய நீதியையும் திமுக அரசு பெற்று தரவில்லை ஆணையம் போட்டுள்ளார்கள் மட்டுமே தவிர ஏதும் நடைபெறவில்லை 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கிறார். ஆனால் அவர்களுக்கு தண்டனை பெற்று தருவதில்லை செய்வது போன்று பூச்சாண்டி காட்டுவதாகவும், நவோதயா பள்ளிகள் அனுமதில்லை என தெரிவிக்கிறார்கள் ஆனால் சிபி எஸ் இ பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பட்டியலின மக்கள் கல்வி பெறுவதை மறைமுகமாக திமுக அரசு தடுப்பதாக குற்றஞ்சாட்டினார். கொள்கை அரசியல் என்பதே தமிழகத்தில் இல்லை தமிழகத்தில் கார்ப்பரேட் அரசியல் தான் உள்ளதாகவும், தவெக தலைவர் விஜய் சிபி ஐ விசாரனைக்கு சென்றுள்ளதற்கு அவர் மட்டும் பொறுப்பு அல்ல மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் கரூர் சம்பவம் நடைபெற்ற போது காவல் துறை பணியில் இருந்தனர். அவர்களுக்கு இதில் பொறுப்பு இருக்க வேண்டுமென தெரிவித்த அவர் பாமகவில் உள்ள பிரச்சனை என்பது குடும்ப பிரச்சனை பேசுபவர்கள் பேசினால் ஒரே நாளில் கூட தீர்க்கப்படலாம் என செ.கு தமிழரசு தெரிவித்துள்ளார்.

















