ஜனநாயகன் ரிலீஸ் ஆக வேண்டி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் – விஜய் முதல்வர் ஆவார் எனவும் ரசிகர்கள் ஆருடம்

விஜய் நடித்த ஜனநாயகன் படம் எந்த பிரச்சனையும் இன்றி ரிலீஸ் ஆக வேண்டி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல்: 2026 தேர்தலில் த வெ க அமோக வெற்றி பெற்று விஜய் முதல்வர் ஆவார் எனவும் ரசிகர்கள் ஆருடம் தெரிவித்தனர் :

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் இன்று ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை குழு படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் ரசிகர்கள் அநிர்ச்சி அடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் ஜனநாயகன் படம் எந்த சிக்கலும் இன்றி உடனடியாக ரிலீசாக வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் தெற்கு மாவட்ட த.வெ.க. சார்பில் மாவட்ட செயலாளர் எம். டி. மணி தலைமையில் திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வேம்புலி அம்மன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு அம்மனிடம் வேண்டிக்கொண்டனர். விஜய் படம் என்றாலே ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் தற்போது அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் விஸ்வரூபம் பல ரூபங்களில் உருவாகி வருகிறது. எனவே தளபதி விஜய் நடித்து வெளியாகும் தினமே எங்களுக்கு பொங்கல் பண்டிகை என்றும் விரைவில் வெளியாக வேண்டும் என்று மண் சோறு சாப்பிட்டதாகவும் அவரது ரசிகர்களான தொண்டர்கள் தெரிவித்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இது போன்ற தடங்கல்கள் வருவதாகவும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக அமோக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சர் ஆவார் என்றும் ரசிகர்கள் ஆருடம் தெரிவித்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதால் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகாது என தெரிகிறது. இது விஜய் ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

Exit mobile version