தீய பழக்கங்களை தீயிட்டுக் கொளுத்தி புது வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் போகி பண்டிகை அன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவன என்பதற்கேற்ப போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் புகையில்லா போகியை கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோக்கள் மூலம் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.இந்த பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வ இளவரசி ஆகியோர் துவக்கி வைத்தனர்.அப்பொழுது போகியின் போது நெகிழி (பிளாஸ்டிக்) ரப்பர் ஆகிய செயற்கை பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.

















