உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் மேற்பட்டோர் பால்குடம் சுமந்து சாய்பாபாவிற்கு அவரவர் கையால் அபிஷேகம் செய்து வழிபாடு, பெண்கள் சாமியாடினர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கூத்தனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்களின் வேண்டுதல்களை கலியுகத்தின் கற்பக விருட்சமான சீரடி சாய்பகவான் தீர்த்து அருள்பாலிப்பதாக நம்பிக்கை. தினமும் இந்த ஆலயத்தில் வழிப்போக்கர் மற்றும் இவ்வூரை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலக மக்கள் நலம் பெற வேண்டி பால்குட திருவிழா நடைபெறும் அந்த வகையில் இந்த வருட ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பால்குட திருவிழா நடைபெற்றதுபூந்தோட்டம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து நடனமாடி கொண்டே பல்லாக்கு தூக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று கூத்தனூர் ஸ்ரீ சிவ சித்தர் சீரடி சாய்பாபா ஆலயத்திற்கு வந்து அவரவர் கையால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். அப்போது பால் தூக்கி சென்ற பெண்கள் சாமி ஆடினார். இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Exit mobile version