புதுவருட பிறப்பை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
2025-ஆம் ஆண்டு நிறைவு பெற்று, 2026-ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டு நன்மை பயக்கும் ஆண்டாக மலர வேண்டும் என, எல்லோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளும், முதல்வரை நேரில் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்து பெற்றனர்.

















