பால்குடம் ஏந்தி சென்ற மேல்மருவத்தூர் பக்தர்கள்……. கயிறு கட்டி வரிசை படுத்திய இளைஞர்கள்..

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இந்த கோவிலுக்கு பெண்கள் குழந்தைகள் என பலரும் மார்கழி மாதத்தில் சிவப்பு நிற மாலை அணிந்து, சிவப்பு நிற உடை அணிந்து விரதம் எடுத்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வது வழக்கம்.. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சன்னதி தெருவில் அருள்மிகு மதுவநேஸ்வரர் ஆலய திருக்குளம் கரையில் மேல்மருவத்தூர் சக்தி பீடம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 நாட்களாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சுவாமி கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை முதல் ஆதிபராசக்தி கோவிலுக்கு இருமுடி பயணம் மேற்கொள்ள இருப்பதால் இருமுடி பயணம் சிறப்பாக அமைய வேண்டியும் உலக மக்கள் நலம் பெற வேண்டிய வழிபாடு மன்றம் சார்பாக பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடை அணிந்து ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்திலிருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க கடைத்தெரு பேருந்து நிலையம் வடக்கு தெரு வழியாக நன்னிலம் கிராம தேவதையாக அருள் பாலிக்கும் ஸ்ரீ தச்சங்குளம் மகா மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அப்போது கடைத்தெரு பகுதியில் பால்குடம் எடுத்து சென்ற பொழுது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பக்தர்களை கயிறு கட்டி வரிசைப்படுத்திய இளைஞர்களின் செயல் பெரும் பராட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும் பால்குட விழாவை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

Exit mobile version