நடராஜர் முத்தமிழ் சபா ஆண்டு விழா – மன்னார்குடியில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடும் நிகழ்ச்சி

மார்கழி மாதத்தை ஒட்டியும், மன்னார்குடியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இசை கலைஞர்களை சேவை மனப்பான்மையுடன் உருவாக்கி வரும் நடராஜர் முத்தமிழ் சபா ஆண்டு விழாவை முன்னிட்டும் மன்னார்குடியில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சங்கரர் கூடத்தில் நடராஜர் முத்தமிழ் சபா சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான இசை கலைஞர்கள் ஒருசேர பஞ்சரத்தின கீர்த்தனை பாடி அஞ்சலி செலுத்தினர் . நடராஜர் முத்தமிழ் சபா இயக்குனர் மாதவராமன் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். தியாகராஜரின் முன்பு மலர் அஞ்சலி செலுத்தி தீப ஆராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பஞ்சரத்ன கீர்த்தனைகள் என்பது கர்நாடக இசையின் தந்தை எனப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகளால் இயற்றப்பட்ட ஐந்து மகத்தான கீர்த்தனைகளின் தொகுப்பாகும். அவை “ஐந்து ரத்தினங்கள்” என்று பொருள்படும்; இந்த கீர்த்தனைகள் “ஜகதானந்த காரகா”, “துடுகுகு கல”, “சாதின்ச்சேனே”, “கனகன ருசிரா”, “எந்தரோ மஹானுபாவுலு” ஆகியவையாகும். இவை பொதுவாக அனைவரும் சேர்ந்து பாடும் மரபுடன் தொடர்புடையவை. மார்கழி மாதத்தை ஒட்டி நடத்தப்பட்ட பஞ்சரத்தின கீர்த்தனையினை ஏராளமான இசை ஆர்வலர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Exit mobile version