புழல் பகுதியில் சாலையோரம்நின்று கொண்டிருந்த லாரிக்கு திடீரென தீப்பிடித்து எரித்து நாசம்.சென்னை புழல் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை பகுதியில் ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் லாரியை நிறுத்திவிட்டு அருகில் இருந்த லாரி ஆபீஸ் சென்றுள்ளார் அப்பொழுது திடீரென லாரியில் இருந்து நெருப்பு கிளம்பியது அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த இளைஞர்கள் அவசர இரசாயனதீஅனைப்பனை கொண்டு தீய அணைக்க முயற்சித்துள்ளனர் ஆனால் புதிய அணைப்பதற்குள் லாரியின் முன்பக்கம் முழுவதுமாக தீ பறவி லாரி முழுவதுமாக எரிந்து நாசமானது.
சம்பவம் குறித்து புழல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்,விசாரணையில் லாரியினுள் சமையல் செய்வதற்காக வைத்திருந்த கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.லாரி தீப்பிடித்து எரிந்ததை கண்ட இரண்டு இளைஞர்கள் துணிச்சலாக ரசாயன தீயணைப்பானை கொண்டு தீயை அணைத்ததால் லாரி முன்பக்கம் மட்டும் எரிந்து மற்ற பாகங்கள் எரியாமல் தடுக்கப்பட்டன.இளைஞர்களின் துணிச்சலான செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

















