திமுக-விடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் – அன்புமணி பேச்சு

திமுக விடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாட்டை சீரழித்த திமுக ஆட்சியை கண்டித்து பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி பங்கேற்ற அன்புமணி திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

அதாவது திமுக ஆட்சியில் குழந்தைகள் கற்பழிப்பு அதிகரித்துவிட்டது மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை போதை பொருள் அதிகரித்துவிட்டது, திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதற்காகவே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கூறினார்.

மேலும் திமுக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசு 3 ஆயிரம் வழங்கப்படுவது மக்களை ஏமாற்றம் செயல் என்றும் போன வருடம் பொங்கலுக்கு ஏன் பொங்கல் பரிசு வழங்கவில்லை இந்த வருடம் தேர்தல் நடைபெறுவதால் காசு கொடுத்து மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நோக்கத்தில் திமுக முயற்சிக்கிறது என்று கூறியுள்ளார்

Exit mobile version