ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தில் – வழக்கிறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி மன்னார்குடியில் வழக்கிறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நீதிமன்ற வளாகம் வெவ்வேறு இடங்களில் வாடகை கட்டிடங்களிலும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்களில் இயங்கி வரும் நீதிமன்றங்களால் வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் 25 ஆண்டு காலமாக பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர் இந்த வகையில் ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட நகராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்து கடந்த ஆண்டு மன்னார்குடி நகர்மன்ற தீர்மான எண் 505 ன் கீழ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னார்குடி வழக்கறிஞர்களின் 25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ரூ 14 கோடி -தொகையை தமிழக அரசு விரைந்து ஒதுக்கீடு செய்ய கோரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வழக்கறிஞர்கள் சார்பு நீதி மன்றம் முன்பு ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்

Exit mobile version