புத்தாண்டு முதல் தினத்தில் மன்னார்குடியில் குடவாசல் ஒன்றியத்தில் இருந்து திமுக உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் .
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் இருந்து திமுக மற்றும் மாற்று கட்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் அந்த கட்சியிலிருந்து விலகி மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர் . இணைந்த அனைவருக்கும் அதிமுக துண்டு அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றார் . இந்நிகழ்வில் நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் .
