நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது, மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி மற்றும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து அவை நிகழ்வுகள் முடிவுபெற்றன.
கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று அவை தொடங்கியது முதல், எதிர்க்கட்சிகள் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.இதனால் அவை நடவடிக்கைகள் அடியோடு முடங்கின.
அவைக்கு உள்ளே போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற அவைக்கு வெளியே வந்தும் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் சோனியா, ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே உள்ளிட்ட INDIA கூட்டணி கட்சிகள் கலந்துகொண்டன.
ராஜ்ய சபாவில் நேற்று முதல் நாளாக குடியரசு துணைத்தலைவர் CP ராதாகிருஷ்ணன் அவையை நடத்த தொடங்கினார். அவரை வாழ்த்தி பேசிய எதிர்க்கட்சியினர் சிறிது நேரத்தில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் அவரால் முதல் நாள் அவையே நடத்த முடியாமல் சிரமப்பட்டார்.














