விழுப்புரத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி பூங்காவை மீட்டெடுக்க விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
விழுப்புரம் நகரப் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி பூங்கா முறையான பராமரிப்பின்றி செடி, கொடிகள் அடர்ந்து புதர்போலக் காட்சியளித்தது. இதனால் சிறுவர்கள் விளையாட முடியாமலும், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.இந்நிலையில் பூங்காவைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டு 100-க்கும் மேற்பட்ட நகராட்சி தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு மண்டியிருந்த புதர்கள் அகற்றப்பட்டு, விளையாட்டு உபகரணங்கள் சீரமைத்து பூங்கா முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினார். மேலும் அங்கு இருந்தவர்களுடன் சிறிது நேரம் இறகுப்பந்து (Badminton) விளையாடி மகிழ்ந்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நீண்ட நாட்களாகப் பாழடைந்து கிடந்த பூங்காவைச் சில மணி நேரங்களிலேயே மீட்டெடுத்த சட்டமன்ற உறுப்பினரின் இந்த விரைவான நடவடிக்கைக்குப் அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். இதில் நகர செயலாளர்கள் சர்க்கரை மற்றும் வெற்றி நகர மன்ற உறுப்பினர் மணவாளன் மணிகண்டன் உடன் இருந்தனர்.
















