திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையினர் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் வசந்தன் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005 பெயரினை விக்சித் பாரத் ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் கிராமின் 2005 என பெயர் மாற்றி திட்டத்திற்கான நிதியினை வெகுவாக குறைத்து ஏழை எளிய மக்களை வஞ்சிக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும், இந்த மக்கள் விரோத ஊழியர் விரோத மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தை மாநில துணைத் தலைவர் சௌந்திரபாண்டியன் துவங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
