தாமதமாக வந்த சட்டமன்ற உறுப்பினர் – கொட்டும் மார்கழி மாத பனியில் சிரால்கள் அவதி

அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழாவில், தாமதமாக வந்த சட்டமன்ற உறுப்பினர், கொட்டும் மார்கழி மாத பனியில், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை காக்க வைக்கப்பட்ட சிரால்கள் அவதி. அங்கன்வாடி திறப்பு- எம்எல்ஏ வருகைக்காக காக்க வைக்கப்பட்ட மழலைகள்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில், 22 ஆவது வார்டு பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நகர் மன்ற உறுப்பினர் உஷாராணி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மற்றும் ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அங்கன்வாடி மைய ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடியில் உணவு சாப்பிடும் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் நிகழ்ச்சிக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். சட்டமன்ற உறுப்பினர் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தாமதமாக 7.30மணி அளவில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் காரணமாக மார்கழி மாதம் கொட்டும் பணியில் குழந்தைகள் காக்க வைக்கப்பட்டனர். இதில் ஒரு தாய் தனது குழந்தை உறங்கிய நிலையில் நிகழ்ச்சியில் காத்திருந்தனர். மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிக்கு தாமதமாக வருவதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சரியான நேரத்தில் பங்கேற்காமல் இருந்தது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version