அரசுப்பேருந்துகள் மோதி விபத்து -11 பேர் உயிரிழந்த சோகம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பேருந்தும், திருப்பூரில் இருந்து காரைக்குடி சென்ற அரசு பேருந்தும், திருப்பத்தூர் – பிள்ளையார்பட்டி சாலையில், வைரவன்பட்டி என்ற இடத்தில், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர், காரைக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், 4 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்திருக்கிறது.

Exit mobile version