கோவை அவிநாசி சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள, ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.
10 கிலோ மீட்டர் நீளமுள்ள தமிழகத்தின் மிக நீண்ட இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்நிலையில், இந்த பாலம் அமைய காரணமாக இருந்தது அதிமுக ஆட்சி தான் எனக்கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அப்போது, இந்த அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை அரசு வைத்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த வேலுமணி, கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு கோவையில் எந்தவொரு புதிய திட்டத்தையும் தொடங்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

















