கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் “நீதி வெல்லும்” என பதிவிட்டு எதிர்வினை தெரிவித்துள்ளார்.
கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.
இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றம் எஸ்ஐடி (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டு, விஜய்க்கு தலைமை பண்பு இல்லை எனவும் குறிப்பிடியது. இதனை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், எஸ்ஐடி விசாரணைக்கு தடை விதித்து, சிபிஐக்கு விசாரணை ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும், இந்த விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கண்காணிப்பார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு தவெகைக்கு சாதகமாக அமைய, விஜய் “நீதி வெல்லும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.