அரசின் அலட்சியமும், காவல்துறையினரின் பாதுகாப்பு குறையாடுமே கரூர் சம்பவத்திற்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் வேலுசாமிபுரத்தில் அதிமுகவிற்கு முன்பு மறுக்கப்பட்ட இடம் தான் த.வெ.க பிரசாரத்திற்கு வழங்கப்பட்டதாக கூறினார். 4 மாவட்டத்தில் விஜய் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், கரூரில் மட்டும் துயர சம்பவம் நடைபெற்றது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.
ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என தெரிந்து, திட்டமிட்டே குறிப்பிட்ட அந்த இடத்தை த.வெ.கவிற்கு ஒதுக்கியதாகவும், அரசின் அலட்சியமும், காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்காததுமே கரூர் நிகழ்வுக்கு காரணம் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தை மூடி மறைக்கவே ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.