உலகிலேயே மிக இளம் வயதில் யோகா ஆசிரியை ஆன, கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த லியோ-சுதா தம்பதியின் மகள் லிசா சாம்சன். 8 வயதான இவர், 4 வயது முதலே யோகா கலையை கற்று வருகிறார். அனைத்து பயிற்சிகளையும் சிறப்பாக செய்யும் சிறுமி, தனியார் யோகா மையத்தில், யோகா ஆசிரியைக்கான பயிற்சியையும் முடித்து, மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், உலகிலேயே 8 வயதில் யோகா ஆசிரியர் பட்டம்பெற்ற இந்த சிறுமியின் சாதனையை, ரஷ்யாவை சேர்ந்த யூனியன் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது. சிறுமி சாதனை புரிந்ததற்கான சான்றிதழை, அந்த அமைப்பின் நிர்வாகிகள் நேரில் வழங்கினர்.