நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாரப்பத்தியில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் விழா இன்று நடந்தது.
கடந்த ஆண்டு விக்கிரவாண்டி அருகே கட்சியின் முதலாவது மாநில மாநாட்டை நடத்திய விஜய், 2-வது மாநாட்டினை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார். மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பாரப்பத்தி சுங்கச்சாவடி அருகே மாநாடு நடத்தப்படுகிறது.
சுமார் 200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக சுத்தம் செய்யப்பட்டு வந்தது. மேலும் பூமி பூஜைக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநாடு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி நடைபெறும் என்று, தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எனவே, பூமி பூஜையை தொடர்ந்து மதுரை மாவட்ட எஸ்பியை நேரில் சந்தித்து, மாநாட்டிற்கு அனுமதி பெற உள்ளனர். இம் மாநாட்டில் முதல் கட்டமாக 120 வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது