இந்திரா காந்தியை போல் தைரியம் இருந்தால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொய் சொல்கிறார் என, நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி சொல்லத் தயாரா என, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
மக்களவையில் ஆப்ரேசன் சிந்தூர் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கக் கூடாது என ராஜ்நாத் சிங் உத்தரவிட்டதால் தான், இந்தியா தனது போர் விமானங்களை இழக்க நேரிட்டது என்று குறிப்பிட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையை, தாம் தான் நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் 29 முறை சொல்லிவிட்டார். ஆனால், அவர் பொய் சொல்கிறார் என, நாடாளுமன்றத்தில் சொல்ல, எனது பாட்டி இந்திராவுக்கு இருக்கும் தைரியத்தில் ஐம்பது சதவீதமாவது பிரதமர் மோடிக்கு தைரியம் உண்டா? என்று, ராகுல் காந்தி சவால் விடுத்தார்.