$ ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை காரணமாக, உள்நாட்டு ராணுவ தளவாடங்களின் மதிப்பும், தேவையும் அதிகரித்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கணக்குத் துறையின் கட்டுப்பாட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முழு உலகமும் நமது பாதுகாப்புத் துறையின் மீது தனது கண்களை பதித்துள்ளது என்று தெரிவித்தார்.
$ பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு, கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டின் அறிக்கையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெயரைக் குறிப்பிடாமல் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் டிரம்ப் இதை தெரிவித்துள்ளார்.
$ தொழில் ரீதியாக உள்ள 10 போட்டி மாநிலங்களில் தமிழ்நாட்டை விட மின் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படுவதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே, முதல்வர் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மின் வாரியத்திற்கு தகுந்த ஆலோசனை வழங்கி பிற மாநிலங்களின் மின் கட்டணத்துடன் ஒப்பிட்டு கட்டணத்தை குறைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
$ ஷாவ்மி நிறுவனம் புதிதாக பவர் பேங்க் ஒன்றை இந்திய ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அதில், ஒரே நேரத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யலாம்.
இதனால், குழுவாகப் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு இந்த பவர் பேங்க் பயனுள்ளதாக
இருக்கும் என ஷாவ்மி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
$ காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை தொழிற்பேட்டையில், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு சுழற்சி முறையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் இங்கு பணியாற்றிய 6 பெண்களை, வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
$ நாடு முழுவதும் செயல்படாமல் உள்ள பிரதம மந்திரி ஜன்தன் வங்கிக் கணக்குகளை மூடுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சகம், செயல்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளின் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு, செயல்படுத்த அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளது.
$ பீகார் மாநிலத்தில் அனைத்து துறை அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற பீகார் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
$ இஸ்லாமியர்கள் இந்தாண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பப் பதிவு நடைமுறை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இஸ்லாமியர்களின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இந்தநிலையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான இணையதளம் செயல்படத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
$ தமிழ்நாட்டை தொடர்ந்து, கர்நாடக மாநில அரசும் ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடக காவல்துறை திருத்த மசோதா 2025-ஐ தயாரித்திருக்கிறது, இந்த வரைவு மசோதா சட்டமாக நடைமுறைக்கு வந்தால் கர்நாடக மாநிலத்தில் இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் செயலி வாயிலாக நடத்தப்படும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் கர்நாடக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.