தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு, ஜூலை 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், தலைவர் விஜய் தலைமையில், வருகிற 4-ஆம் தேதி காலை சென்னை, பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், கட்சியின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும், கட்சித் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எனவே, கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும்படி, புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.