“தர்ஷனின் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ல் ரிலீஸ்!”

கனா’ திரைப்படத்துக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு வெளியான ‘தும்பா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் தர்ஷன். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பின்னர், அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்திலும் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் ‘ஹவுஸ் மேட்ஸ்’ என்ற திரைப்படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் SK Productions மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளதுடன், SK Productions நிறுவனமே இப்படத்தை வழங்கியுள்ளது.

‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதில், கதாநாயகன் ஒரு வீடு வாங்குகிறார்; அதன் பின்னர் அந்த வீட்டில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்கள் படத்தில் காமெடியுடன் சேர்த்து காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இது ஒரு காமெடி ஹாரர் வகை திரைப்படமாக உருவாகியுள்ளது.

Exit mobile version