மதுராந்தகம் பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

மதுராந்தகம் பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்.

டெல்லியில் இருந்து மத்திய காவல் படை விரைந்துள்ளதால் ட்ரோன் கேமரா உள்ளிட்ட பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஜனவரி 23, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார் ; மேலும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார், இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, டிரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது,

நாளை மறுநாள் பிரதமர் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வர இருப்பதால் சாலையெங்கும் பேனர்கள் கட் அவுட்டுகள் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது மேலும் பிரம்மாண்டம் மேடை அமைக்கும் பணி நாளை தயார் நிலையில் வைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

பிரதமர் நரேந்திர மோடி மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கள்ள நிலையில் பாதுகாப்பு கருத்தில் கொண்டு டெல்லியில் இருந்து மத்திய பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர் மேலும் மோப்ப நாய்கள் வர வைக்கப்பட்டு ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பிரதமர் 23ஆம் தேதி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதுராந்தகத்தில் உள்ள ஒரு மைதானத்தில் தரை இறங்கும் இடமும் தயார் செய்து வருகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு கூட்டணி கட்சி சேர்ந்த அத்தனை நிர்வாகிகளும் தலைவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.

ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை மோடி சந்தித்திருக்கிறார்

இதனால் மதுராந்தகம் பகுதியில் மோடி வருகை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version