பெங்களூரு : கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளப்பெருக்கில் சிக்கி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கர்நாடகாவின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
இந்த ரெட் அலர்ட் அறிவிப்பின்படி, குறிப்பிட்ட மாவட்டங்களில் 204 மில்லிமீட்டர் அல்லது அதற்கும் அதிக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் அவசர தேவைக்கு தயாராக இருக்க வேண்டும் என வானிலை துறை எச்சரித்துள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள் :
தக்ஷண கர்நாடகா
உடுப்பி
உத்தர கன்னடா
ஷிவ்மோகா
சிக்கமகளூரு
குடகு
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்:
பெலகாவி
தார்வாட்
கடாக்
ஹாவேரி
தாவணகெரே
மைசூரு
பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெங்களூரு நகரம், புறநகர் பகுதிகள், கொப்பல் மற்றும் பாஹல்கோட் ஆகியவை இந்த பட்டியலில் அடங்குகின்றன.
பெங்களூரு நகரம் தற்போது வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு, சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.