தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வரும் 8-ஆம் தேதி கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் வரும் 9-ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, குறிப்பிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வானிலை துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version