மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது குறிப்பாக தரங்கம்பாடி தாலுக்கா கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது தரங்கம்பாடி மற்றும் கடலோரப் பகுதியில் வழக்கத்தைவிட கடல் சற்று சீற்றத்துடன் காணப்படுகிறது மேலும் தரங்கம்பாடி கடற்கரையில் வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள பகுதியில் கடல் சீற்றம் மற்றும் கனமழை காரணமாக கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது ஆண்டுதோறும் கடல் சீற்றம் மற்றும் கனமழை மண்ணரிப்பு காரணமாக டேனிஷ் கோட்டை பாதிக்கப்படும் சூழல் உள்ளது கடல் சீற்றம் மண்ணரிப்பால் வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை பாதிக்கப்படாமல் நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.




















