- தமிழகத்தில் குட்கா, புகையிலைப் பொருள்களுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சியின் ரூ. 200 கோடி நிதிப் பத்திரங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடக்கிவைத்தார்.
- தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- குப்பையில் வீசுவதற்கா மாநிலக் கல்விக் கொள்கை, தாக்கல் செய்து ஓராண்டாகியும் தமிழக அரசு வெளியிடத் தயங்குவது ஏன் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
- நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000த்தை கடந்துள்ளது. கேரளா, டில்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- ”நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு இந்தியர்கள் 140 கோடி பேரும் பாடுபடுகிறார்கள்” என பிரதமர் மோடி பேச்சு.
- ‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது” என ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றம் சாட்டியுள்ளார்.
- ”நானும் தலைவர் தான் என்று இத்தோடு 5 முறை புலம்பித் தள்ளிவிட்டீர்கள் முதல்வர் ஸ்டாலின். புலம்பியது போதும்” என எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
- மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என வீடியோ நாடகம் நடத்திவிட்டு, இப்போது மட்டும் சென்றது ஏன்?
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
- நடிகர் ஜாக்கி சான் ரூ.3,400 கோடி மதிப்புள்ள தன் சொத்துகளைத் தானமாக வழங்கியதாகத் தகவல்.