ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
தமிழ் சினிமா ரசிகர்கள் கடந்த சில வாரங்களாக காத்திருந்த ஒன்று ரஜினி மற்றும் கமல் இணையும் படம் பற்றிய அறிவிப்பு. ஆனால் இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட தகவல் ரசிகர்களை கலவையான உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. “தக் லைஃப்” படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாததால், பிறந்தநாள் முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ் வருமா என ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர்.
அந்த நேரத்தில், ரஜினி – கமல் இணைவு குறித்த பேச்சுகள் பரவி, இரு தரப்பின் ரசிகர்களும் ஹைப் ஏற்றினர். கமலும் ரஜினியும் பல பேட்டிகளில் “நாங்கள் இணைந்து நடிக்க ஆசை” என உறுதிப்படுத்தியதால், இது உறுதி என அனைவரும் எண்ணினர்.
சௌந்தர்யா & ஸ்ருதி விளக்கம்
சமீபத்தில் நடந்த விருது விழாவில், ஸ்ருதிஹாசன் “நாங்களும் ரசிகர்களைப்போல காத்திருக்கிறோம்” என்றார். சௌந்தர்யா ரஜினிகாந்த் மேலும் உறுதிப்படுத்தும் வகையில், “என் அப்பா கமல் மாமாவின் பேனரில் நடிக்கிறார், அதன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது” என கூறினார்.
இதனால், ரசிகர்கள் “இது தான் ரஜினி–கமல் படம்!” என்று உறுதியாக நம்பினர். இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் வெளியான அறிவிப்பு ரசிகர்களை சற்றே அதிர்ச்சியடைய வைத்தது. அதன்படி,
“ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் விரைவில் தொடங்குகிறது” என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கமல்ஹாசன், ரஜினிக்காக எழுதிய வாழ்த்துச் செய்தி கவிதை வடிவில் வெளியிட்டிருந்தார்:
“அன்புடை ரஜினி,
இரு பனிப் பாறைகள் உருகி நதிகளானோம்,
மீண்டும் காற்றாய், மழையாய் மாறுவோம்…”
இந்த வரிகள், இரு நாயகர்களின் நட்பையும், பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்துகின்றன.
சுந்தர்.சி – ரஜினி கூட்டணி மீண்டும்!
அருணாச்சலம் பிறகு ரஜினி மற்றும் சுந்தர்.சி இணையும் இந்தப் படம், ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல் இதில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பாரா என்பது தற்போது தெரியவில்லை.
ரசிகர்கள் ரியாக்ஷன்
கமல் ரசிகர்கள் “கூட்டணி அறிவிப்பு வரும்” என எதிர்பார்த்த நிலையில், இந்த அறிவிப்பு சிறு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதே சமயம் ரஜினி ரசிகர்கள் “ஜெயிலர் 2”க்குப் பின் இது ஒரு பெரிய மேகா என்ட்ரி ஆகும் என உற்சாகமாக உள்ளனர்.
