March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மாரி செல்வராஜை கைது செய்ய கோரி ஹரி நாடார் கட்சி போராட்டம்

by Priscilla
October 18, 2025
in Cinema
A A
0
மாரி செல்வராஜை கைது செய்ய கோரி ஹரி நாடார் கட்சி போராட்டம்
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தாரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று குற்றம் சாட்டி, அவரை கைது செய்யக் கோரி ஹரி நாடாரின் ‘சத்திரிய சான்றோர் படை’ கட்சி சார்பில் ஆலங்குளத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டம் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 5 முதல் 6 பேர் வரை கலந்து கொண்டனர். அப்போது கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்ஸ் நாடார் பேசியபோது, “இயக்குனர் மாரி செல்வராஜ் தொடர்ந்து ஜாதி மோதலை தூண்டும் விதமாக திரைப்படங்களை இயக்கி வருகிறார். ‘பைசன்’ படமும் தென் மாவட்டங்களில் அமைதியாக இருக்கும் சூழலை பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்தார்.

மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. இதில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், பா. ரஞ்சித் தயாரித்த நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன.

திரைப்படம் சமூக அரசியல் பின்னணியுடனும், தென் மாவட்ட மக்களின் வாழ்வியல், காதல் மற்றும் கபடி விளையாட்டை மையப்படுத்தியும் அமைந்துள்ளது. துருவ், கபடி மீது ஆர்வமுள்ள இளைஞராக நடித்துள்ளார். கதை இந்தியா–பாகிஸ்தான் கபடி போட்டியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், இப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறி, சத்திரிய சான்றோர் படை ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்தக் கட்சியின் தலைவர் ஹரி நாடார் ஆவார். அவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அப்போது அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பூங்கொதை ஆலடி அருணா 70,614 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.

அந்தத் தேர்தலில் ஹரி நாடார், ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிட்டு 37,727 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். நாடார் சமூகத்தின் வாக்குகள் ஆலங்குளம் தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கின்றன.

Tags: bison moviedirector mari selvarajHari Nadar's partytamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தீபாவளியன்று மழை பெய்யுமா ? வானிலை ஆய்வாளர் வெளியிட்ட கணிப்பு !

Next Post

“இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம்” – தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட என். ஆனந்த்

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
“இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம்” – தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட என். ஆனந்த்

“இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம்” – தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட என். ஆனந்த்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.