நடிகராக அறிமுகமாகும் ஹெச்.ராஜா – ‘கந்தன் மலை’ படம் விரைவில் திரைக்கு !

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, அரசியல் பின்னணியில் தனது பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது திரைப்படத் துறையிலும் கால் பதிக்கிறார்.

அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கந்தன் மலை’ என்ற புதிய திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டு விழா, நெல்லையில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் வீரமுருகன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சிவ பிரபாகரன் மற்றும் சந்திரசேகர் இணைந்து தயாரித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் பகுதியில் உருவாகியுள்ள இப்படம், ஒரு வாரத்திலேயே திரைக்கு வரவுள்ளதாக ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த தகவல், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெற்ற சிறப்பு விருந்தில் வெளியானது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, ஹெச். ராஜா நடித்துள்ள ‘கந்தன் மலை’ திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. அரசியலைத் தொடர்ந்து, திரையுலகிலும் ஹெச். ராஜா எப்படிப் பரிணாமமடைகிறார் என்பதை காணும் ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Exit mobile version