பரசலூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க பூமிபூஜை போடப்பட்ட அரசு புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் குடியேறும் போராட்டம். திமுக கட்சி கொடியுடன் 60க்கும் மேற்பட்ட குடிசை கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு;-
மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரசலூர் ஊராட்சியில் திருவள்ளுவர் தெரு, அண்ணாநகர், காமராஜர் நகர் கிராம பொதுமக்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பொது இடுகாடு, கால்நடை மருத்துவமனை, நெல் கொள்முதல் நிலையம், சமுதாயக்கூடம் அமைத்து தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அந்த இடத்தில் அரசின் நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் கானோளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இலவச வீட்டுமனை பட்டா மற்றொரு இடத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிலையில் இன்று பரசலூர் கிராமமக்கள் திமுகவின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஹிட்லர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், ராஜேந்திரன், திமுக பொறுப்பாளர்கள் நாகராஜன், காந்தி, பாலைய்யா, இளம்பரிதி தலைமையில் நெல்சேமிப்பு கிடங்கு கட்ட முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட பகுதியில் திமுக கட்சி கொடியுடன் 60க்கும் மேற்பட்ட குடிசை கொட்டகைகளை அமைத்து அதில் பொங்கல் வைத்து சமைத்து சாப்பிட்டு குடியேறும் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த தரங்கம்பாடி தாசில்தார் சதீஷ் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து அந்த இடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீட்டுமனை பட்டா கொடுக்கவில்லை என்றால் தொடர்போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.
பேட்டி. ஹிட்லர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.













