தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்.
வணிகர் தின அரசாணை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

சிறு வணிகர்களை பாதுகாக்க ஒரு சட்டம் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் தவறுகிற பட்சத்தில் நாடு தழுவிய போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கையிலெடுக்கும் என்பதை எச்சரிக்கையோடு என திருவாரூரில் நடைபெற்ற வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா மாநில மாநாட்டில் பேச்சு .

திருவாரூர் தனியார் திடலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 43 வது மாநில மாநாடு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது தொடர்ந்து மாநாட்டை விக்ரமராஜா தொடங்கி வைத்து பேசியதாவது….

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள். தற்போது நடக்கும் 43வது மாநில மாநாடு வரலாற்று சிறப்பு மிக்கது.
வணிகர் தின அரசாணை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அந்நிய நாட்டு கார்பரேட் கம்பெனி ஆதிக்கம், ஆன் லைன் ஆதிக்கம், அண்டை மாநில கார்பரேட் ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ள வணிகர் சங்கம் தயாராகி கொண்டிருக்கிறது என தெரிவித்தார் தொடர்ந்து

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு முக்கிய சிறப்பு பிரகடன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் சிறு வணிகர்களை பாதுகாக்க ஒரு சட்டம் வேண்டுமென்பதை வலியுறுத்தி கொண்டுள்ளோம். அதை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் தவறுகிற பட்சத்தில் நாடு தழுவிய போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கையிலெடுக்கும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவிக்கிறேன்.

சாமான்ய வணிகர்களை அப்புறப்படுத்த கார்பரேட் கம்பெனிகள் சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த சூழ்ச்சி வலைகளில் இருந்து வியாபாரிகளை பாதுகாக்க தொழில் முனைவோர் அமைப்பு, இளைஞரணி என்ற அமைப்புகளை உருவாக்க நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் ஓய்வு பெற்ற தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு , பிரபல நடிகர் லெஜன்ட் சரவணன் மற்றும் மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

Exit mobile version