சென்னை: கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாறி வந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அக்டோபர் மாத ஆரம்பத்திலிருந்து தீபாவளி வரையிலும் தொடர்ந்து உயர்வைக் கண்ட தங்கம் விலை, பண்டிகை நாளுக்குப் பிறகு கடுமையாக சரிந்தது. குறிப்பாக நேற்று ஒரு நாளிலேயே சவரனுக்கு ரூ.3,000 வரை குறைந்ததால் நகை பிரியர்கள் உற்சாகமடைந்தனர்.
ஆனால் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் ஏற்றமடைந்துள்ளது.
இன்றைய விலை விவரம் :
22 காரட் தங்கம்: கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,210 ஆகவும்,
சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.89,680 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம்: கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.9,350 ஆகவும்,
சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.74,800 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி விலை: கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.166 ஆகவும்,
ஒரு கிலோ ரூ.1,66,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளதால் நகை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம், அடுத்த சில நாட்களில் சர்வதேச சந்தை மாற்றங்களின் அடிப்படையில் விலை மேலும் மாறக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
















