சென்னை:
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடுகள் அதிகரித்ததால் கடந்த சில நாட்களாக அவற்றின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. அதன் தாக்கமாக இந்திய சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,04,000-க்கு விற்பனையானது. அதே நாளில் ஒரு கிராம் ரூ.110 உயர்ந்து, ரூ.13,000-க்கு விற்கப்பட்டது.
மேலும், அன்றைய தினம் மாலை நேரத்தில் மீண்டும் தங்கம் விலை உயர்வடைந்து, சவரனுக்கு ரூ.800 அதிகரித்தது. இதனால் ஒரு கிராம் ரூ.13,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,160-க்கும், ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.13,020-க்கும் விற்பனை ஆகிறது.
இதனுடன் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ.281-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ அளவில் ரூ.4,000 சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,81,000-க்கு விற்கப்படுகிறது.
















