வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைவு !

சென்னை: வாரத்தின் தொடக்கமான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து, இன்று ரூ.92,320 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.10 குறைந்து ரூ.11,540 ஆக பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தைகளில் நிலவும் மாற்றங்கள் காரணமாக, நாட்டில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது. கடந்த சனிக்கிழமை தங்கவிலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.11,550 ஆக இருந்தது. அன்றைய தினம் சவரன் விலையும் ரூ.1,520 குறைந்து ரூ.92,400 ஆக விற்பனையானது. வெள்ளி விலையும் ஐந்து ரூபாய் குறைந்து, கிராமுக்கு ரூ.175 என பதிவானது. நேற்று விடுமுறை காரணமாக விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்து, சவரனுக்கு ரூ.92,320 மற்றும் கிராமுக்கு ரூ.11,540 என விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் சிறிதளவு சரிவு கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.173 ஆக விற்பனைப்படுகிறது.

Exit mobile version