நன்னிலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் நன்றி தெரிவித்தார்..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நன்னிலம் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் வெற்றி பெற்றார்.
நன்னிலம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளரை விட சுமார் 41 ஆயிரத்து 724 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து,
நான்காவது முறையாக நன்னிலம் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்த தொகுதி வாக்காளர்களுக்கு இன்று நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் நன்றி தெரிவித்தார்..
நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நன்னிலம் வடக்கு ஒன்றிய பகுதிகளான செறுவலூர், கொத்தவாசல், கோவில் திருமாளம், ரெட்ட குடி, செம்பியநல்லூர், உபய வேதாந்தபுரம் உள்ளிட்ட 25 ஊராட்சி பகுதிகளில்.. இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று… முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி. பி. ஜி அன்பழகன் உள்ளிட்ட அதிமுக பொறுப்பாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.















