• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள் தான் வனக்காவலர்கள் : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

by Priscilla
June 5, 2025
in News
0
சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள் தான் வனக்காவலர்கள் : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை : “வனக்காவலர்கள் தான் காடுகளின் முதுகெலும்பு ; சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள் நீங்கள் தான்” எனத் தெரிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்ந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “இன்று உலக சுற்றுச்சூழல் நாள் மட்டுமல்ல ; நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் இருக்கின்றது என்பதை உணர்விக்க வேண்டிய தினமாகும். காடுகள் தான் இந்த பூமிக்கு மூச்சளிக்கும் நுரையீரல் போன்றவை” எனக்குறிப்பிட்டார்.

மேலும், “வனக்காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதில் எனக்கு பெருமிதம். நீங்கள் தான் காடுகளின் முதுகெலும்பு, சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள். மேப்பில் பச்சைத் திட்டு போல காடுகளை சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது. அவை உயிர்களின் அடிப்படை ஆதாரங்கள்” என்றார்.

தமிழகம் முன்னிலை வகிக்கிறது

தமிழக அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னணியில் இருப்பதை வலியுறுத்திய முதல்வர், “இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழகத்தைப் போல் எந்த மாநிலமும் அதிக திட்டங்களை கொண்டு செயல்படவில்லை என்பதை அடித்துச் சொல்கிறேன். இதுவரை 1,207 ஹெக்டேர் தரம் குன்றிய சதுப்பு நிலங்களை மீட்டெடுத்துள்ளோம். பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றம் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக சம்பந்தப்பட்டவை. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

மாற்றமே வெற்றிக்கு வழி

மஞ்சப்பை திட்டம் குறித்து பேசும் போது, “மீண்டும் மஞ்சப்பை திட்டம் அரசின் முயற்சி மட்டுமல்ல ; அது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். திட்டங்களை அரசு உருவாக்க முடியும்; ஆனால் அதன் வெற்றி, மக்கள் தங்கள் தினசரி பழக்கங்களை மாற்றிக் கொள்ளும் உறுதியில்தான் உள்ளது. ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், வேறு வழியில்லை. ‘துணிப்பை, தண்ணீர் பாட்டில் இல்லாமல் வெளியே செல்லமாட்டோம்’ என்ற உறுதிமொழியை எடுத்து கொள்ளவேண்டும்” என முதல்வர் வலியுறுத்தினார்.

Tags: chennaiForest guardsmk stalin
Previous Post

“சிம்பு தன்னைத் தானே ஒதுக்கிக்கொண்டார், ரசிகர்கள் அவரை வெறுக்கவில்லை” – இயக்குநர் அமீர் கருத்து

Next Post

டில்லி இல்லத்தில் ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி : இணையத்தில் வீடியோ வைரல் !

Related Posts

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
Next Post
டில்லி இல்லத்தில் ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி : இணையத்தில் வீடியோ வைரல் !

டில்லி இல்லத்தில் ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி : இணையத்தில் வீடியோ வைரல் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6