கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு.
அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக முற்றிலும் மழை பொழிவு இல்லாத நிலை மற்றும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது.
அருவியில் மிகக் குறைந்த அளவில் வரும் நீரில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு வனவிலங்குகள் குடிநீர் தேடி அருவி பகுதிக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியல் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் இன்று முதல் தடை விதித்துள்ளனர்.
மேலும் அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து அருவிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் வரை கும்பக்கரை அருவிகள் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் கோடை விடுமுறை முன்னிட்டு கும்பக்கரை அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்
