கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த திருமதி யூலியா, மற்றும் திரு இலியா ஆகிய இருவரும் தமிழ் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதால் சித்த மருத்துவம் மற்றும் யோகாசனம் பயின்று வந்தனர். இவர்கள் சமீபத்தில் மதுரை சித்த மருத்துவ குருகுலத்தில் இதற்காக பயின்று சான்றிதழ் பெற்றுள்ளனர். தமிழ் கலாச்சாரம் மீது ஆர்வம் கொண்டு சித்த மருத்துவம் யோகா இவற்றில் தேர்ச்சி பெற்ற வெளிநாட்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருஞ்சேரியில் நடைபெற்றது. பெருஞ்சேரியில் 56 அடி உயர சிவலிங்கா ஆலயம் அமைந்துள்ள தாலுகாவனத்து சித்தர் பீடத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர், சித்தர் பீடத்தை நிர்வாகி வினோத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற தேர்ச்சி பெற்ற வெளிநாட்டவர்களுக்கு சால்வை போர்த்தி மலர்கொத்து கொடுத்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். தங்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக வெளிநாட்டவர் திருமதி யூலியா தெரிவித்தார்.

















