சித்தர் காட்டில் உள்ள நவீன அரிசி ஆலையில் உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன் ஆய்வு செய்த போது பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்கும் நவீன அரிசி ஆலை மூடக்கோரி நெல்லின் தவிட்டில் இருந்து உருவாகும் வண்டுக்களை பாட்டிலில் அடைத்து எடுத்து வந்து காண்பித்து மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த அப்பகுதி மக்கள் நவீன அரிசி ஆலையால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு நுரையீரல் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக பொதுமக்கள் தொடர்ந்த வழக்கில் ஆலையை மூட 2010 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ஆலை தற்போது வரை இயங்கி வருவதாகவும், இந்த ஆலையால் புற்றுநோய், சரும பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டி
அரவை செய்த நெல்லின் தவிட்டில் இருந்து உருவாகும் வண்டுகள் பறந்து சுற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரும் தொந்தரவாக இருப்பதாக பாட்டிலில் அடைத்து எடுத்து வரப்பட்ட வண்டுகளை காண்பித்து அமைச்சரிடம் நடவடிக்கை எடுக்க கோரி புகார் தெரிவித்தனர். ஒரு வீட்டில் இன்று மட்டும் எடுக்கப்பட்ட பூச்சிகள் என்று பாட்டிலில் எடுத்து வந்த பூச்சியை காண்பித்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். தொடர்ந்து மனுவை பெற்ற அமைச்சர் வேங்கடரமணன் உரிய ஆய்வு செய்து கருத்துகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
