கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை விரிவுபடுத்தி தொடங்கி வைத்ததனை தொடர்ந்து மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை பற்றுஅட்டையினை வழங்கினார்கள்

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் கிராமத்தில் உள்ள தனியார் அரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 43,484 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 20 ஆயிரத்து 669 அவர்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான ஆணை வழங்கினர் .

இதன் படி திருவாரூர் மாவட்டத்தில் தற்போது இரண்டு லட்சத்து 57 ஆயிரத்து 956 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது…

இன்றைக்கு உள்ள தமிழகத்தின் கட்டமைப்பு மிக வலுவான கட்டமைப்பு ஒவ்வொரு பெண்களிடமும் தற்சார்பு பொருளாதார போலவே அவர்கள் பெரும் பணத்தை சேமிப்பாகவோ ஓர் முதலீடாகவோ பயன்படுத்துவதால் மிகப் பெரிய ஓர் பொருளாதார மாற்றம் ஏற்படும் அளவிற்கு இன்று இந்திய துணை பெரும் கண்டத்திலேயே பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்பதற்கு மிக முக்கிய காரணம் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது போன்ற திட்டங்கள் திராவிட மாடல் அரசு செய்த எந்த ஒரு திட்டத்தை யாவது இந்த ஒரு திட்டம் சரியில்லை இதற்கு பதில் வேறு ஒரு திட்டம் நான் கொண்டு வருவேன் என்று சொல்லி ஓட்டு கேட்கின்ற தெம்போ திராணியும் தமிழ்நாட்டில் இல்லை.

தமிழ்நாட்டில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து இதுவரையில் கிட்டத்தட்ட பத்திற்கு மேற்பட்ட மாநிலங்களில் இத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.

தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் இந்திய துணை பெரும் கண்டத்திலேயே தமிழகத்திற்கு ஈடு இணையற்ற வேறு ஒரு மாநிலம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் பெண்கள் முன்னேற்றம் திராவிட மாடல் ஆட்சி வழி வகுத்து கொடுக்கும் என்பதை இந்த தருணத்தில் பதிவு செய்து இந்த அளவிற்கு பல்வேறு திட்டங்களை யோசித்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

ஒவ்வொரு சிறு விஷயங்களைக்கூட யோசித்து யோசித்து செய்யக்கூடிய திராவிட மாடல் அரசு தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் பல நல்ல திட்டங்களை பல ஆண்டுகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறேன்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தையல்நாயகி, வருவாய் கோட்டாட்சியர்கள் சத்யா , யோகேஸ்வரன், திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரெங்கநாதபிரபு, பேரூராட்சி மன்ற தலைவர்கள் ராஜசேகரன், மகாலெட்சுமி முருகேசன், அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version