சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருவெண்ணீற்றுமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது தேவார பாடல் பெற்ற இக்கோவில் திருஞானசம்பந்தர் துணைவியாருடன் சிவ ஜோதியில் ஐக்கியமான தலமாக திகழ்கிறது இதனால் இக்கோவில் சுவாமியை வழிபடுபவருக்கு முக்தி வேறு கிடைக்கும் என கூறப்படுகிறது இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் தோத்திர பூர்ணாம்பிகை உடனாகிய திருஞானசம்பந்தர் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தர் பஞ்ச மூர்த்திகளுடன் கொடிமரம் அருகே எழுந்தருள தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை அண்ணாமலை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தினர் தொடர்ந்து பஞ்சமி திதி, புனர்பூச நட்சத்திரத்தில் காலை 10 மணிக்கு கடக லக்னத்தில் கொடி மரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 26 ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்வும், 29ஆம் தேதி தேர் திருவிழாவும், 30ஆம் தேதி தீர்த்தவாரியம், ஜூன் 1ஆம் தேதி திருஞானசம்பந்தர் திருக்கல்யாணமும், 2ம் தேதி அதிகாலை சிவஜோதி ஐக்கிய காட்சியும் நடைபெற உள்ளது.
