சின்னங்குடி மீனவ கிராமத்தில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் முகத்துவார தூர்வாரும் பணி மற்றும் சீர்காழி வட்டம் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் தூர் வாரும் பணியை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்த நிலையில் பூமி பூஜை செய்து பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், சின்னங்குடி , பூம்புகார் மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன் இறங்குதளத்தை மேம்படுத்துதல் மற்றும் முகத்துவாரத்தைத் தூர்வாரும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தரங்கம்பாடி வட்டம் சின்னங்குடி கிராமத்தில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளத்தை மேம்படுத்துதல், முகத்துவாரத்தைத் தூர்வாரும் பணிகள் மற்றும் சீர்காழி வட்டம் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். அதனைத் கடற்கரையில் மாவட்ட ஆட்சியர்
ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் சின்னங்குடி மற்றும் பூம்புகார் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும், படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், தடையின்றி மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளவும் இது பெரிதும் உதவும் என்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் அனைவரும் இந்த விழாவிற்கு வருகை தந்து மீனவ மக்களின் நீண்ட கால கனவு நனவாகும் தருணத்தை வரவேற்று மகிழ்ந்தனர்.
சின்னங்குடி மீனவ கிராமத்தில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் & முகத்துவார தூர்வாரும் பணி & பூமி பூஜை செய்து பணி
