ஆந்திர மாநிலம் ஆம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள பானா சஞ்சா பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர், மேலும் 2 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தொழிற்சாலை லைசென்ஸ் பெற்றதாக இருப்பினும், பட்டாசுகளை தவறாக கையாளுவதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைப் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு அறிவிப்பு வெளியிட்டு, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “இந்த விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. சம்பவத்திற்கான காரணங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, நிவாரணம் மற்றும் மருத்துவ உதவி வழங்க ஆலோசனை செய்து உள்ளேன். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உதவி வழங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.