கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்த திரைப்பட தயாரிப்பாளர், கலப்பை மக்கள் இயக்க தலைவர் பிடி செல்வகுமார்.
நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வு க்கான முடிவுகள் வெளியாக்கிய நிலையில் தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 600 க்கு 590 மதிப்பெண்களைப் பெற்று மாவட்டத்தின் முதலிடம் பிடித்த கொட்டாரம் அரசு மேல்நிலை ப்பள்ளி மாணவி அக்க்ஷயா மற்றும் 600 க்கு 586 இரண்டாம் இடம் பிடித்த நாவல் காடு மாதிரி பள்ளி மாணவன் ராகவன் ஹரி ஆகிய இருவருக்கும் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்த திரைப்பட தயாரிப்பாளர் பிடி செல்வகுமார். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னணியில் வாகனத்தை பரிசாக அளிக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
