பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கைது :-
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், மற்றும் பணி நிரந்தரம் ஆகியவை அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. திமுக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தங்கள் கோரிக்கைகள் எதனையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தும், உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் என்று 300க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பங்கேற்று சாலை மறியலில் ஈடுபட்டதுடன் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

















